ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

வீட்டு மருத்துவக் குறிப்புகள்:-

வீட்டு மருத்துவக் குறிப்புகள்:-
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

"மரு" (Skin Tag) உதிர...

"மரு" (Skin Tag) உதிர... 
இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும். இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை... அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.

வாழ்க்கைப் படிகள் பதினாறு (16)

வாழ்க்கைப் படிகள் பதினாறு (16)
1) மிகமிக நல்ல‍ தொரு நாள் எது ?
பதில் - இன்று
2) மிகப் பெரிய வெகுமதி எது?
பதில் – மன்னிப்பு
3) நம்மிடம் இருக்க‍ வேண்டி யது எது?
பதில் – பணிவு
4) நம்மிடம் இருக்க‍க் கூடாதது எது ?
அதுக்கு இதுதான் பதில் – வெறுப்பு
5) நமக்கு அத்தியாவசியமாய் தேவைப்படுவது எது?
பதில் – ச‌மயோஜித புத்தி
6) ந‌மக்கு வரக்கூடாத அதி பயங்கர நோய் எது?
பதில் – பேராசை
7)ந‌மக்கு எளிதாக வரக்கூடியது எது
அதுக்கு இதுதான் பதில் – குற்ற‍ம் காணல்
8) நம்மிடம் இருக்க‍ கூடாத கீழ்த்த‍ரமான செயல் எது?
பதில் - போறாமை
9) நாம் எதை நம்பக்கூடாது?
பதில் – வ‌தந்தி
10) எதுன்னு கேட்ட‍து - ந‌மக்கு அதீத ஆபத்தை உண்டாக்குவது எது?
பதில் – அதீத பேச்சு
11) நாம் செய்யவேண்டியது எது?
பதில் – உதவி
12) நம்மிடம் இருந்து விட்டொழிக் க‍ வேண்டியது எது?
பதில் – விவாதம்
13) ந‌மது உயர்வுக்கு வழி எது?
பதில் – உழைப்பு
14) நாம் எதை நழுவ விடக்கூடாது?
பதில் – வாய்ப்பு
15) பிரி(ய)க்கக் கூடாதது எது?
பதில் – நட்பு
16) நாம் எதை ம‌றக்க கூடாதது ?
பதில் – நன்றி

வீட்டு செலவை குறைக்க முத்தான பத்து உபயோகமான தகவல்கள் !!!

வீட்டு செலவை குறைக்க முத்தான பத்து உபயோகமான தகவல்கள் !!!
விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்… இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை.
சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்… கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்… ‘கஷ்டம் இல்லை’ என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும்.
அந்த சூத்திரங்கள் ‘முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.
1.கேஸில் மிச்சமாக்கலாம் காசு!
அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும்.
தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும்.
மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இயன்றவரை ‘சிம்’மில் வைத்து சமைத்தால் காய்கறிகளின் சத்தும் வீணாகாது.
கேஸும் மிச்சமாகும்.
அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு கடுகு, எண்ணெய் என்று பொருட்களை எடுக்க அலைமோதாதீர்கள்.
சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கையருகில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்றவையுங்கள்.
ஃப்ரிட்ஜில் இருந்து பொருட்களை எடுத்தவுடன் சமைக்க ஆரம்பித்தால்… எரிபொருள் அதிகம் செலவாகும்.
2.மொத்த விற்பனைக் கடையை நாடுங்கள்!
பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்காமல், கடைவீதியில் மொத்தமாக மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகளில் மாதத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கினால்… 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பணம் மிச்சமாகும்.
மேலும் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் கடைகளில் பல பொருட்களுக்கு எம்.ஆர்.பி விலையில் இருந்து சல்லிக்காசுகூடக் குறைக்கமாட்டார்கள்.
ஆனால், மொத்த விற்பனைக் கடைகளில், தங்கள் லாபத்தில் சிறு பகுதியை விட்டுக்கொடுத்து விலை குறைவாக விற்பனை செய்வார்கள்.
3.பெட்ரோல் சிக்கனம்!
சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து விடுங்கள்.
வாகனங்களை ஒழுங்காகப் பராமரித்தால் வாகன எரிபொருள் செலவு மட்டுப்படும்.
கிளட்ச், பிரேக் போன்றவற்றை தேவை இல்லாமல் அழுத்திக் கொண்டிருந்தாலும் மளமள என்று எரிபொருள் காலியாக ஆரம்பிக்கும்.
வெளிவேலைகளைக் குறித்து வைத்துக் கொண்டு, ஒரு முறை வாகனத்தை எடுக்கும்போதே அனைத்து வேலைகளையும் முடிக்கப் பாருங்கள்.
ஒரே திசையில் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் நண்பர்கள் இருந்தால், பயணத்தையும், எரிபொருள் செலவையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நிழலில் வாகனத்தை நிறுத்தினால்… பெட்ரோல் ஆவியாவது பெருமளவு தவிர்க்கப்படும்.
4. ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்ய மறக்காதீர்கள்!
ஆளில்லாத அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறி, விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, கணிப்பொறி போன்றவற்றை அணையுங்கள்.
வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மின்சாதனங்களின் ஸ்விட்ச்கள் அணைக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
குறிப்பாக, மின்வெட்டு சமயங்களில் இதை நிச்சயமாக கடைப்பிடிப்பதன் மூலம், கரன்ட் போகும்போது ‘ஆன்’ ஆகியிருந்த சாதனங்கள்,
கரன்ட் வரும்போது செயல்பட்டு மின்சாரம் வீணாவதைத் தடுக்கலாம்.
5.தவறான பழக்கத்துக்கு ‘தடா’ போடுங்கள்!
உங்களது குடும்ப அங்கத்தினர் யாருக்கேனும் புகை மற்றும் குடிப்பழக்கம் இருப்பின் அதை கைவிட உங்களால் ஆனதைச் செய்யுங்கள்.
உடல் நலன் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு… இந்த பழக்கங்களுக்கு செய்யப்படும் மிக அதிகமான செலவையும் கட்டுப்படுத்தி, அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.
6.தண்ணீர்… தண்ணீர்!
வேலைகளைச் செய்யும்போது குழாய்களை திறந்து வைத்துக் கொண்டு செய்யாமல், சில நொடிகளே என்றாலும்… தேவை இல்லாதபோது, குழாய்களைச் சரியாக மூடினாலே பெருமளவு தண்ணீரைச் சேமிக்கலாம்.
மிகச் சரியான முறையில் திட்டமிட்டுக் குளித்தால் அரை வாளி முதல் ஒரு வாளிவரை தண்ணீரே சுத்தமாகக் குளிப்பதற்குப் போதும்.
இதுபோல நாம் யோசித்து செயல்பட்டால், சமையலறை பயன்பாடு உட்பட பல வழிகளிலும் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.
7.குண்டு பல்பு வேண்டாமே!
குண்டு பல்புகள் அதிகம் மின்சாரத்தை உறிஞ்சும். எனவே, குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் சி.எஃப்.எல். வகை பல்புகளுக்கு மாறுங்கள்.
இதன் மூலம் மின்சாரம் 70% அளவுக்கு சேமிக்கப்படுகிறது. சி.எஃப்.எல். பல்புகளின் ஆயுட்காலமும் அதிகம்.
8. கிச்சன் இருக்க ஹோட்டல் எதற்கு?
அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவது இப்போது ஃபேஷன் ஆகி வருகிறது.
வெளியில் சாப்பிட்டால் ஒரு நபருக்கு 100 ரூபாய்க்கும் குறைவில்லாமல் செலவு ஆகும்.
புத்தகம், டி.வி-யில் இடம்பெறும் தரமான ரெசிபிகளை முயற்சித்துப் பாருங்கள்.
நீங்களே தயாரித்தது என்ற பெருமிதமும் இருக்கும்; வெளியில் செல்லும் அலைச்சலும், பண விரயமும் தவிர்க்கப்படும். இது, ஆரோக்கியத்துக்கும் நல்லது.
9.நேரத்தை பணமாக்குங்கள்!
வெட்டி அரட்டை, அதிகப்படியான தூக்கம் போன்றவற்றில் விரயமாகும் நேரத்தை சேமித்து, உருப்படியான வழியில் செலவிடுங்கள்.
படைப்பாற்றல், புதிய தொழில் கற்றுக்கொள்ளுதல், ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுதல் இவற்றின் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
10.செலவு குறைக்கும் செல்போன் ‘பேக்கேஜ்’!
குடும்ப அங்கத்தினர் அனைவர் கையிலும் தனித்தனி செல்போன் இருக்கும் காலம் இது.
அப்புறம் வீணாக லேண்ட் லைன் தொலைபேசி எதற்கு?
மேலும் குடும்ப அங்கத்தினர் அல்லது அடிக்கடி நாம் பேசும் நபர்களுடன் குறைந்த செலவில் தொடர்பு கொள்ள பலவிதமான பேக்கேஜுகள் இருக்கின்றன.
அவற்றில் எது சிறந்தது, சிக்கனமானது என்பதைத் தேர்வு செய்யுங்கள்

வாலிப பருவத்தினரே உங்களுடைய முகத்தில் முக‌ப்பரு வராம‌ல் தடு‌க்க...

வாலிப பருவத்தினரே உங்களுடைய முகத்தில் முக‌ப்பரு வராம‌ல் தடு‌க்க...
துளசி சாற்றை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் கழுவி விட்டால் முகப் பரு தொல்லை ஏற்படாது.
முகப்பரு இருப்பவர்கள் வேப்பமரப் பட்டையை வெண்ணையில் அரைத்துத் தடவுவது நல்லது.
மஞ்சளை, கறி வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால் முகப்பரு மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் மறையும்.
மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பது நல்லது.
இப்படி தொடர்ந்து செய்வதால் கன்னத்தின் அழகு அதிகரிக்கும்.
சந்தனம், மஞ்சள் போன்றவற்றை பொடியாக்கி முகத்தில், கை, கால்களில் தடவலாம்.

வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பால், வெண்ணை கலந்து குழைத்துப் பூச வேண்டும்.

எ‌ண்ணெ‌ய்த் தன்மை கொண்ட சருமத்தை உடையவர்கள் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து உடலில் பூசலாம்.

கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் அந்த சுவாரசியமான விடயங்கள்..!

கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் அந்த சுவாரசியமான விடயங்கள்..!
இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி பிரச்சினை அதிகரித்து வருகின்றது இறுதியில் குடும்ப பிளவு கூட ஏற்படுகின்றது. இதற்கு காரணம் கணவன் மனைவி புரிந்துணர்வு இன்மையாகும் . ஒரு கணவன் தான் மனைவியிடம் பின்வருவனவற்றை எதிர்பார்த்து நிற்கின்றான்
1* எப்போதும் சிரித்த முகம்.
2* மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
3* காலையில் முன் எழுந்திருத்தல்.
4* பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல்.
5* நேரம் பாராது உபசரித்தல்.
6* கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7* எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8* அதிகாரம் பண்ணக் கூடாது.
9* குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10* கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11* கணவனை சந்தேகப்படக் கூடாது.
12* குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13* பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14* வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15* கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16* இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17* அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18* குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19* கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20* கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21* தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22* எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.
23* தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24* தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25* அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26* குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27* சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28* கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29* பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30* உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31* தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32* உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ் எதிர் பார்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மனைவி பின்பற்றும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. மனைவியின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தானாகவே நிறைவேறும்.